ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்: சொந்த மகனே எடப்பாடி அணிக்கு தாவ தயார்!

ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்: சொந்த மகனே எடப்பாடி அணிக்கு தாவ தயார்!


Caston| Last Updated: சனி, 27 மே 2017 (16:38 IST)
அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா, எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியாக இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-இன் மகனே எடப்பாடி அணிக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

 
 
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் அவருக்கான ஆதரவு அலை அதிகமாக இருந்தது. பலரும் அவரை வந்து சந்தித்து சென்றனர். குறிப்பாக மத்திய பாஜக அரசின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருப்பதாக பேசப்பட்டது. இதனால் பலரும் ஓபிஎஸ் ஆதரவு முடிவை எடுத்தனர்.
 
ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் ஆட்சியும் மட்டுமில்லாமல் மத்திய அரசின் ஆதரவு ஓபிஎஸ் அணிக்கு தற்போது இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் அணியில் உள்ள பலர் மீண்டும் அணி தாவ தயாராகும் மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏன் அவரது சொந்த மகன் ரவீந்திரனே எடப்பாடி அணி பக்கம் சாய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மணல் குவாரியை எப்படியாவது எடுத்துவிடலாம் என கனவில் இருந்த ரவீந்திரன் அப்பா ஓபிஎஸ்-இன் அணியின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் அதிருப்தியில் இருந்துள்ளார்.
 
டெல்லியின் செல்வாக்கு ஓபிஎஸ் அணிக்கு குறைந்து வருவதால் ரவீந்திரன் எடப்பாடி அணியுடன் சென்று சேர்ந்துவிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சொந்த மகனே எடப்பாடி அணிக்கு தாவும் மனநிலையில் இருப்பதால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 


இதில் மேலும் படிக்கவும் :