இரு அணிகளும் இணையாது - ஓ.பி.எஸ் திட்டவட்டம்

திங்கள், 26 ஜூன் 2017 (13:42 IST)
அதிமுக கட்சியில் உள்ள இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவில் ஓ.பி.எஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணி என இரு அணிகள் செயல்படுகிறது. இரு அணிகளும் இணைவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனாலும், சில கோரிக்கைகளில் ஓ.பி.எஸ் அணி உறுதியாக இருப்பதால், இதுவரை பேச்சுவார்த்தை கூட நடைபெறவில்லை.
 
அந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து விடுவதாக அறிவித்தார். 
 
மேலும், சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர் “ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை நாங்கள் ஆதரித்துள்ளோம். ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
இவரின் அறிவிப்பு முதல்வர் எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments