செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 4 மே 2017 (09:50 IST)

கொடநாடு கொலை சம்பவம்: ஓபிஎஸ் மகனுக்கு தொடர்பு?

கொடநாடு கொலை சம்பவம்: ஓபிஎஸ் மகனுக்கு தொடர்பு?

கொடநாடு கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ஜெய் பிரதீப்புக்கு இடையே தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.


 
 
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் ஒன்றில் சிக்கி சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இவரது மரணம் விபத்து அல்ல கொலையாக இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
 
இதனையடுத்து கனகராஜ் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரிடம் தொடர்பில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெய் பிரதீப்பிடம் கனகராஜ் தொடர்பில் இருந்துள்ளார்.
 
கனகரான் விபத்தில் சிக்கி மரணமடைந்து உயிரிழக்கும் சில தினங்களுக்கு முன்னரும் சென்னை வந்து சில அதிமுக பிரமுகர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ்ஸின் வீட்டுக்கே சென்று அவரது மகனுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
 
இதனையடுத்து போலீசார் கனகராஜின் இரண்டு சிம் கார்டுகளையும் ஆய்வு செய்ததை அடுத்துதான் கனகராஜ் ஓபிஎஸ் மகனுடன் பேசியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கனகராஜ் உடன் போனில் பேசியவர்களை எல்லாம் விசாரணைக்கு அழைக்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாகவும். இதனால் ஓபிஎஸ் மகனை நோக்கியும் விசாரணை வரலாம் என கூறப்படுகிறது.