1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (11:04 IST)

ஓபிஎஸ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே: தனது அணியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா?

ஓபிஎஸ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே: தனது அணியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா?

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது அவரது அணியில் உள்ள அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


 
 
சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றிருந்த ஓபிஎஸ் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளுக்கு பின்னர் ஓபிஎஸ் தனது அணியில் உள்ள பல முக்கிய தலைவர்களிடம் ரகசியமாக நாம் இப்படியே பாஜகவில் இணைந்தால் என்ன, உங்கள் கருத்து என்ன என தீவிரமாக கருத்து கேட்டுள்ளார் என பேசப்படுகிறது.
 
இதனை கேட்ட பெரும்பாலான தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிமுகவை கைப்பற்றுவதை விட்டுவிட்டு தனது சொந்த லாபத்திற்காக பாஜகவில் இணைய சொல்கிறாரே என அவர்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கு நாம் சசிகலா பக்கமே போய்விடலாமே என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதனால் அந்த அணியில் ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
டெல்லியில் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விளக்கி சொல்லியும் யாரும் ஓபிஎஸ் சொல்வதை போல பாஜகவில் இணைய விரும்பவில்லை. இதனால் அடுத்து என்ன செய்ய என்பது புரியாமல் இருக்கும் ஓபிஎஸ் விபரத்தை டெல்லிக்கு தகவல் சொல்லிவிட்டு அடுத்த உத்தரவுக்கு காத்திருக்கிறாராம்.