வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2016 (12:35 IST)

கரூர் வைஸ்யா வங்கியில் ஆன்லைன் மோசடி

மோசடி கும்பலுக்கு வங்கி நிர்வாகம் உதவும் பொருட்டு செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 

 
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, கூம்பூர் வங்கியில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட அம்மாபட்டியை சார்ந்த என்.பெரியசாமி என்பவர் வங்கிகணக்கை துவக்கி அவரது கணக்கு வழக்கு நடைமுறைப்படுத்தி வந்துள்ளார். 
 
இந்நிலையில் விவசாயியும், ஆடு மாடுகளை வளர்த்து வரும் கால்நடை விவசாயி ஆன இவரது வங்கி கணக்கில் இருந்து ஆடு விற்ற பணம் அவ்வப்போது வங்கியில் வரவு வைத்து வந்த நிலையில், ரூ 93 ஆயிரம் பணத்தை யாரோ எடுத்துள்ளதாக அந்த வங்கியிடம் தெரிவித்து, இது குறித்து வங்கி மேலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அலட்சியமாக தெரிவித்து மெத்தனம் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
பாதிக்கப்பட்டவர் அவரது குடும்பத்தாருடனும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தையடுத்து கரூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். 
 
இது குறித்து என்.பெரியசாமியின் மகன் செந்தில் குமார் தெரிவித்த போது, எப்படி பணம் சென்றது என்று கேட்டால் அந்த வங்கி மேலாளர் சைபர் கிரைம், மிடம் முறையிடதான் வேண்டும், அதற்கும் எங்கள் வங்கிகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர். எனவே கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திடம் புகார் கொடுத்தும், கரூர் வைஸ்யா வங்கியிடமும் புகார் கொடுத்தும் உள்ளதாகவும், தெரிவித்தார். 
 
மேலும் பெரிய நெட்வொர்க் வாய்ந்த இந்த கரூர் வைஸ்யா வங்கி எங்களது ஏழை விவசாயிகளின் பணத்தை அபகரித்தது பற்றி எந்த வித முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை. 
 
மேலும் பேங்க்கிற்கு இந்த கும்பல் உதவி செய்யும் பொருட்டு உதவி வருகிறதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் கரூர் வைஸ்யா வங்கியின் எஸ்.பி கணக்கில் வைக்கப்படும் தொகை பாதுகாப்பு இல்லையா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. பேங்கின் அலட்சிய போக்கினால் எங்களது பணம் போல் பல லட்சமோ, பல கோடிகளோ கைமாறி இருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்நிலையில் சுமார் 10 நாட்களுக்குள் தங்களது பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், மீடியாவிற்கு சென்றால் லீகல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டுமென்று வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.