1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (14:02 IST)

ஒ.என்.ஜி.சி விண்ணபத்தை நிராகரித்துவிட்டோம்: மீத்தேன் திட்டம் குறித்து தங்கம் தென்னரசு பதில்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கடந்த பல ஆண்டுகளாக டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உள்பட பொதுமக்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்
 
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு உறுதியாகக் கூறினார். குறிப்பாக அரியலூர் மற்றும் கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க வேண்டி ஓஎன்ஜிசி விண்ணப்பம் அளித்ததாகவும் இந்த விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு நிராகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனையடுத்து தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி இருக்கும்வரை அனுமதி கிடைக்காது என்று கூறப்படுகிறது.