செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2020 (09:59 IST)

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா உறுதி ! எப்படி பரவியது?

திருச்சியில் கொரோனா தொற்று இருந்த தந்தையின் மூலம் அவரது குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 106 பேருக்குக் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் வரை 969 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 1075 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் வரை குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திருச்சியில் புதிதாக 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் ஒரு வயது குழந்தையும் அடக்கம். ஏற்கனவே கொரோனா தொற்று இருந்த தந்தையின் மூலம் அந்த குழந்தைக்குப் பரவி இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.