1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2017 (10:51 IST)

மேலும் ஒரு ஓபிஎஸ் உருவாகிறார்: யார் தெரியுமா?

மேலும் ஒரு ஓபிஎஸ் உருவாகிறார்: யார் தெரியுமா?

தமிழக சட்டசபையில் சில தினங்களுக்கு முன்னர் கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரை மீது, தாங்கள் கொடுத்த திருந்தங்களை எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ புகழேந்தி, பள்ளி குழந்தைகள் போல் தன்னுடை கைகளைக் கட்டிக் கொண்டு மிகவும் பவ்வியமாக பேசினார்.


 
 
இதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். இதனையடுத்து அவருக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஓபிஎஸ், பணிவுக்கே பணிவு காட்டும் என்னையே புகழேந்தி மிஞ்சிவிட்டார். அவர் எப்போதும் இப்படியே நடந்து கொள்ள வேண்டும் என அவரது நடவடிக்கையை வைத்து கலாய்த்தார்.
 
முதல்வரின் இந்த கம்மெண்டை கேட்ட ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். இதனையடுத்து இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏ புகழேந்தியை திமுகவில் ஒரு ஓபிஎஸ் என குறிப்பிட்டுள்ளார்.

 
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், பணிவு காட்டுவதில் திமுக உறுப்பினர் புகழேந்தி என்னை விஞ்சிவிட்டார்: ஓபிஎஸ் -அப்படியானால் திமுகவிலும் ஓர் ஓபிஎஸ் உருவாகிறார்! என்றார்.