திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (12:06 IST)

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிமுக பலிகடா ஆகப் போகிறது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதில் அதிமுக பலி கடா ஆகிவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



நாடு முழுவதும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையை அமலுக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பலமாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட்டால் பல கட்சிகளும் பாதிக்கப்படும். அதில் அதிமுகவும் ஒன்று. ஆனால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணராமல் பலி கடா போல தானாக சென்று தலையை கொடுத்துள்ளது அதிமுக” என விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படலாம் என பேசிக் கொள்ளப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Edit by Prasanth.K