செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (08:46 IST)

காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு "திருக்குறள்"பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்!

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ், என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தற்போது 'திருக்குறள்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
நிறைவு பணி நிறைவடைந்த நிலையில் திரைப்படம் திரையிடலுக்கு ஆயத்தமாகி உள்ளது.
 
இந் நிலையில் மகாத்மாகாந்தி பிறந்தநாள், மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு  சென்னை தி.நகரில் அமைந்துள்ள காமராஜர் இல்லத்தில் திருக்குறள் திரைப்பட குழுவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
 
காமராஜ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந் நிகழ்வில் திருக்குறள் திரைப்படத்தின் பணியாற்றிய நடிகை நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.