வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 4 ஜூன் 2015 (15:08 IST)

அமைச்சர் ஓ.பி.எஸ்.-ன் தம்பி ஓ.ராஜா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது

பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜா மீது, பூசாரி தற்கொலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
  
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த தம்பி ஓ.ராஜா.  இவர், பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது அவ்வப்போது, பல தருணங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கும்.
 
பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் தலித் சமுகத்தைச் சேர்ந்த  நாகமுத்து என்பவர் பூசாரியாக இருந்தார்.
 
இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்து, தற்கொலைக்கு ஓ.ராஜா தான் காரணம் என்று, அவர் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போனார்.
 
இதனையடுத்து, பூசாரி நாகமுத்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
 
வழக்கை கையில் எடுத்த காவல்துறை, இந்த விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
இந்நிலையில், இன்று காலை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில், காவல்துறை சார்பில், பெரியகுளம் அதிமுக நகர் மன்றத் தலைவர் ஓ.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓ.ராஜாவை சிபிசிஐடி காவல்துறையினர் எந்த நேரத்திலும் கைது செய்யும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்றது.