திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (13:25 IST)

சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சிய ஓபிஎஸ்: போட்டுடைக்கும் தம்பிதுரை!

சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சிய ஓபிஎஸ்: போட்டுடைக்கும் தம்பிதுரை!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் அதிமுக எம்பி தம்பிதுரை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி கரூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் ஓபிஎஸ் பற்றி பேச தவறவில்லை.


 
 
அப்போது பேசிய அவர் 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எந்த சந்தேகத்தையும் எழுப்பாத பன்னீர்செல்வம் தற்போது அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதற்கு காரணம் பதவி வெறி என கூறினார்.
 
மேலும், தம்பிதுரை பிஜேபி துணையோடு கட்சியின் பொதுச்செயலாளர் ஆக பார்க்கிறார். நீங்கள்தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று ஜெயலலிதா இறந்த சமையத்தில், இல்லாத குற்றச்சாட்டைச் சொல்லி சசிகலாவின் காலில் விழுந்து கெஞ்சியவர் தான் பன்னீர்செல்வம்.
 
சசிகலா பொதுச்செயலாளர் ஆக முதல் கையெழுத்து போட்டதே ஓபிஎஸும், மதுசூதனனும் தான். கேபினட் அமைச்சர்கள் சசிகலாவை பார்க்க சென்றபோது அன்னைக்கு நெடுஞ்சான் கிடையாக சசிகலாவின் காலில் விழுந்தவர் பன்னீர்செல்வம், அப்போதே நான் சசிகலாவிடம் சொன்னேன், இந்த ஆளு கால்ல விழுறத பார்த்தா ஏதோ சதி பண்ண போறார்னு என தம்பிதுரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.