1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (14:37 IST)

பல வருடங்களாக கொள்ளையடிக்கப்படும் ஹவாலா பணம் : அதிரவைக்கும் உண்மை

பல வருடங்களாக கொள்ளையடிக்கப்படும் ஹவாலா பணம் : அதிரவைக்கும் உண்மை

இந்திய அளவில் மட்டுமல்லாமல், தமிழக அளவில் ஏன் காவல்துறை வரலாற்றிலேயே ஹவாலா பணத்தை கொள்ளையடித்த காவலர்கள் என்ற பெருமை பெற்ற மாநிலம் நமது தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. 


 
 
அதற்கு வெட்கிக்குனியும் நிலையில், அந்த செயலில் ஈடுபட்ட கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குளித்தலை காவல் நிலைய எஸ்.ஐ சரவணன், தலைமைக்காவலர் தர்மேந்திரன் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 
இந்த சம்பவத்தினால் முதல்வரின் துறையே சிக்கி சின்னா பின்னமாகியுள்ளது. ஆனால் இந்த தனிப்படை விசாரணையை தொடர்ந்து மேலும் இரு காவல் அதிகாரிகள் பழனிவேல், அர்ஜுனன் ஆகிய இருவரும் தற்போது கைது செய்யப்ப்ட்டு திருப்பூரில் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி, கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியய்யா ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் சாதாரண விவகாரம் இல்லை என்பதும், சுமார் ரூ.4 கோடி மட்டுமல்ல என்பதும், இன்னும் ஏராளமான கோடிகள் இருக்கலாம் என்றும் இந்த விஷயத்தில் ஏராளமான அதிகாரிகள் உள்ளிருக்க கூடும் என்று அரசியல் கட்சிகள் போர்க் கொடி தூக்கியுள்ளது.
 
ஹவாலா பணம் என்றால் என்ன ?
 
ஹவாலா பணம் என்பது பல்வேறு நாடுகளிடையே சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனை செய்யப்படும் பண பரிமாற்றம் ஆகும். இந்த ஹவாலா பண பரிமாற்றம் பொதுவாக ஹவாலா முகவர்களை கொண்டு செயல்படுத்தபடுகிறது. மேலும் ஹவாலா என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொற்கள் வழக்கத்தில் இல்லாததால், இதனை முறைகேடான வெளிநாட்டு பணபரிமாற்றம் என்று சொல்லாம். ஆனால் இந்த பண பரிமாற்றங்கள் தமிழகத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் வரை நடைபெற்று வருகின்றது.
 
ஒரு வருடத்திற்கு முன்பு?
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, மேற்கு வங்கத்திலுள்ள, தமிழக தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.50 கோடி பணத்தை ஐ.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இந்த செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது. மேலும் இது ஹவாலா பணம் என்று அப்போதே தெரியவந்தும், இந்த ஹவாலா பணம், மேற்கு வங்கம் வழியாக வங்கதேசம் சென்று அங்கிருந்து, அரபு நாடுகளுக்கு செல்வதாக உளவுத்துறை வட்டாரங்கள் அன்றே கூறியது.
 
தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்களுக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் பெயருக்காவது சில தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதற்கு காரணம், கணக்கில் காட்டாத பணத்தை வங்கதேசத்துக்கு கடத்திச் செல்ல அந்த நிறுவனங்கள் உதவும் என்பதுதான்.
 
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, வங்கதேச நாட்டுக்கு எளிதில் பணத்தை கடத்த முடிகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு பணம் எளிதில் பரிமாறப்படுகிறது. துபாயிலுள்ள தாவூத் கும்பல் இந்த பணத்தை பெற்று ஐபிஎல் போன்ற விளையாட்டுகளின்போது சூதாட்டத்திற்கு பயன்படுத்துகிறது.
 
மேற்கு வங்கத்தில் அப்போது நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி விசாரணையிலும், இதே ரூட்தான் கையாளப்பட்டது சிபிஐ விசாரணையில் அம்பலமானது.  தற்போது தமிழகத்தை சேர்ந்த லாட்டரி பிரமுகரும் இதே வழியில்தான் ஹவாலாவை கையாண்டுள்ளது, தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி பணம் இவ்வாறு துபாய் செல்கிறதாம்.
 
ஹவாலா பணத்தில் 70 விழுக்காடு கள்ள லாட்டரிகள் மூலம் சம்பாதிக்கப்படுவதுதானாம். சென்னையில் இருந்து மூட்டைகளில் பணத்தை கட்டி மேற்கு வங்கத்திற்கு அந்த தொழிலதிபர் அனுப்பி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் மேற்கொண்டு கோடி, கோடி என்று கோவையில் மட்டும் மாட்டிக் கொள்வதோடு, அதை காவல்துறை கண்டும் காணமால விட்டு விடுவது ஏன் என்று தெரியவில்லை. 
 
இந்த வருடத்தில் நிஜ போலீஸே சுமார் 4 கோடியை கொள்ளையடித்த சம்பவம் !
 
கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை, போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு, காரை சோதனையிடுவது போல் நடித்து, காரை கடத்திச் சென்றனர்.


 
 
ரூ.3.90 கோடி பணத்துடன் கார் கடத்தப்பட்தாகக் கூறப்பட்டது. ஆனால், காரின் சொந்தக்காரரான கேரள மாநிலம் மலப்புரம் தங்க நகைக் கடை உரிமையாளர் அன்வர் சதா, கார் மட்டும் கடத்தப்பட்டதாக கோவை மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார். காரில் இருந்தது ஹவாலா பணம். அதை மறைத்தே புகார் தரப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. 4 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி 27-ம் தேதி பாலக்காடு அருகே நின்ற காரை மீட்டனர்.
 
இது தொடர்பாக, மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய தில், காரையும் அதில் இருந்த ரூ.3.90 கோடியையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக்கொண்டு, மீதம் 2 கோடியை, உடந்தையாக இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து கரூர் மாவட்ட போலீஸார் கூறியதாவது:
 
கரூர் மாவட்டம் வீரராக்கியத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தொழிலதிபர் வீட்டு காவலாளிகள் கடத்தப்பட்ட வழக்கு விசாரணை தனிப்படையில், க.பரமத்தி காவல் ஆய்வாளர் என்.முத்துக்குமார், குளித்தலை காவல் உதவி ஆய் வாளர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகிய 3 பேரும் இடம்பெற்றிருந்தனர். இவர் களுக்கு, கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் 4 கோடி ரூபாய் பணத்துடன் கார் கடத்தப் பட்ட வழக்கில் தொடர்பு இருப்ப தாக கோவை தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.



 

 
தொழிலதிபர் வீட்டு காவலாளி கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர் பாக என்.முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகிய 3 தனிப்படை போலீஸாரும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி உடுமலைக் குச் சென்றிருந்தனர். அந்த சமயத் தில்தான், ரூ.3.90 கோடி பணத்துடன் காரை கடத்திக்கொண்டு சென் றுள்ளனர்.
 
இதையடுத்து, காவல் ஆய்வாளர் முத்துக்குமாரை, கோவை ஏடிஎஸ்பி சந்திரமோகன் நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத் துச் சென்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
 
இந்தநிலையில், காவல் ஆய்வாளர் என்.முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி அருண் உத்தரவிட்டுள்ளார்.


 
 
பின்னர் ஒரிரு நாட்களில் கரூரில் உள்ள ஒரு வீட்டில் எஸ்.ஐ. சரவணனும், தர்மேந்திரனும் ரகசியமாக இருந்து வந்தது கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து அந்த இடத்திலிருந்து ரூ 60 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ததும் தெரியவந்ததுடன், அந்த மூன்று போலீஸாரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தென்னிலை மற்றும் க.பரமத்தி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அர்ஜூனன், பழனிவேலு ஆகிய இருவரிடமும் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதை தொடர்ந்து கரூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு டி.எஸ்.பி க்களையும் காவல்துறை பணியிடை மாற்றம் செய்துள்ளது.
 
அடிக்கடி சிக்கும் ஹவலா பணம்..அதுவும் கோவையில் மட்டும் தானா?
 
இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க, இதே பகுதியில் கடந்த 2015ம் வருடம் ஜனவரி மாதம் 7ம் தேதி கோவை பாலக்காடு பைபாஸ் சாலையில்  காலை ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு கார் புறப்பட்டது. காரை யாசர் என்பவர் ஓட்டி வந்தார். காரில் ஜலில் உள்பட 3 பேர் இருந்தனர்.
 
ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் செல்லும் 31 என்ற நம்பர் உள்ள அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், காரும் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் யாசரும் மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர்.
 
காரில் இருந்து கட்டுக்கட்டாக ரோட்டில் பணம் சிதறியது. பணத்தை அந்த வழியாக சென்ற சிலர் எடுத்துச்சென்றனர். விபத்து குறித்து மதுகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
காரை சோதனை செய்ததில் காரின் 4 பக்க கதவில் ரகசிய அறை அமைத்திருந்தது தெரிய வந்தது. ரகசிய அறையை திறந்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கபட்டிருந்ததும், அதில் இருந்து சிதறி ரோட்டில் கிடந்ததும் தெரியவந்தது.
 
இதுகுறித்து வருமான வரித்துறைக்கும், மதுக்கரை வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காரில் பயணம் செய்த ஜலில் மற்றொருவரிடம் விசாரணை நடத்தியபோது ஈரோட்டில் உள்ள முஸ்தபா என்பவர் கேட்டரிங் வைக்க பணத்தை தந்ததாக கூறினார்.
 
இதனையடுத்து முஸ்தபாவை கோவைக்கு போலீசார் அழைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் இந்த பணம் ஹவாலா பணமா? அல்லது வேறு பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து தெரியவரும் என்று கூறப்பட்டது பின்னர் அந்த சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. ஆனால் அப்போது கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம் ரூ.3 கோடி முதல் 5 கோடி வரை இருக்கும் என்று தெரிந்தது ஆனால் அந்த விஷயமும் தற்போது தலை தூக்கியுள்ளது.
 
எது எப்படியோ, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டால் மட்டுமே, இந்த ரகசியம் மூடி மறைக்காமல் அப்படியே வெளியிடப்படும் என்றும், இது தமிழக முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் இந்த விவகாரம் மற்றும் விசாரணையை சி.பி.ஐ மேற்கொள்ள வேண்டுமென்று பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்ட செய்தியாளர்