”குஷ்பூ இட்லி; இளங்கோவன் சட்னி” - வடசென்னை அதிமுகவினரின் அளப்பரை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 22 மே 2016 (20:19 IST)
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி கொண்டாடும் விதமாக வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுகவினர் இவ்வாறு பிளக்ஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.
 
 
நடந்து முடிந்த 17ஆவது சட்டமன்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில், வடசென்னை தெற்கு மாவட்ட அதிவினர் சார்பாக ஒட்டப்பட்டுள்ள ஒரு பிளக்ஸில், “குஷ்பு இட்லி; இளங்கோவன் சட்னி; கையேந்தி கருணாநிதி; கைப்புள்ள ஸ்டாலின்; குவாட்டர் விஜயகாந்த்; இனி எல்ல்லாமே ஏப்பம்; அம்மான்னா சும்மா இல்லடா” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கு கீழே, ‘வெற்றித்தாயின் உண்மை விசுவாசி V.எபிநேசர், வடசென்னை தெற்கு மாவட்டம் என்றூ குறிப்பிட்டுள்ள்ளார். இதனை பார்த்து செல்லும் பொதுமக்கள் ‘யப்பா.. இப்பவே கண்ணக் கட்டுதே....’ என்று கமெண்ட் அடித்துவிட்டு செல்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :