கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (09:51 IST)
சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரே நிறுவனம், வளாகத்தில் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் நேரடியாக முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.

இநிந்லையில் தற்போது சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட்டாக தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் அவர்களது இடத்திலே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தால் முகாம் அமைக்கப்பட்டு 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :