முதல்வர் வெளிநாடு சென்றாலும் தற்காலிக முதல்வர் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (19:36 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இம்மாதம் 28ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ளார். அவர் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரம் தொடர்பான பல்வேறு முன்னேற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிநாடுகளிலிருந்து அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெறவும் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொள்ளவுள்ளார்.
 
 
இந்த நிலையில் முதல்வர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் வரையில் தற்காலிக முதல்வர் நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், யாரை நியமனம் செய்வது என்று முதல்வர் குழப்பத்தில் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது
 
ஆனால் முதல்வர் வெளிநாட்டிற்கு சென்றாலும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பார் என்றும், முதல்வர் வெளிநாடு செல்வதால் கேர்-டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
 
வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் பழனிச்சாமி செப்டம்பர் 10 ஆம் தேதி தமிழ்நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments