தேவர் மீது எந்த அவதூறும் பரப்பவில்லை: கோபண்ணா விளக்கம்


K.N.Vadivel| Last Updated: சனி, 7 நவம்பர் 2015 (05:28 IST)
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது எந்த அவதூறும் பரப்பவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் கோபண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
 
 
பசும்பொன் மக்கள் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆதி சுப்ரமணியன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், தமிழக மக்களும், அரசியல் கட்சியினரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
 
தேவர் ஐயா அவர்கள் பற்றி தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரசின் செய்திப்பிரிவு  தலைவர் கோபண்ணா அவதுாறாக பேசி உள்ளார். இது போலவே, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பேசியுள்ளார். எனவே, இவர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா குறித்த சி.டி வெளியீடுக்குத் தேவையான வேலைகளில் நானும், சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை நிறுவனர் சந்திரசேகரன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர்தான் ஈடுபட்டு இருந்தோம்.
 
அப்படிப்பட்ட எங்கள் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள். நாங்கள் தேவர் மீது எநத தவறான தகவல்களையும் கூறிவில்லை. இந்த,சதிக்கு பின்னணியில், திருச்சி வேலுச்சாமியும், கராத்தே தியாகராஜனும் உள்ளனர் என விளக்கம் கொடுத்துள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :