திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (15:30 IST)

கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணிக்கு சீட் கொடுக்கக்கூடாது: எதிர் கோஷ்டிகள் வலியுறுத்தல்..!

இந்த முறை சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரத்திற்கும் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கும் வாய்ப்பு வழங்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் எதிர் கோஷ்டிகள் காங்கிரஸ் மேலிடத்தில் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து அல்லது ஆறு தொகுதிகள் தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் ஜெயித்த பல தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாகவும் கடந்த முறை போட்டியிட்ட பத்து தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காது என்றும் புதிதான தொகுதிகள் எல்லாம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டு போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என அவர்களது எதிர்கோஷ்டிகள் காங்கிரஸ் மேல் இடத்தில் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையே முடியவில்லை, எத்தனை தொகுதிகள் என்பது கூட முடிவடையாத நிலையில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வலுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran