1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No relationship with DMK: Says Alagiri

கோபாலபுரம் வந்தும் கருணாநிதியை சந்திக்காத அழகிரி: திமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

கோபாலபுரம் வந்தும் கருணாநிதியை சந்திக்காத அழகிரி: திமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!

அழகிரி
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கும் திமுகவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார்.


 
 
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சராக இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் முழுமையாக நீக்கப்பட்டார்.
 
இந்த சூழலில் அவர் புதிய கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியை அவ்வப்போது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று கோபாலபுரம் வீட்டிற்கு வந்த மு.க.அழகிரி தந்தை கருணாநிதி ஓய்வில் இருந்து வருவதால் அவரை சந்திக்கவில்லை. தன்னுடைய தாய் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து பேசினார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கட்சிப் பணிகளில் ஈடுபடுவீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் தற்போது திமுகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
அகதிகளை காவு வாங்கும் லிபியா கடற்பகுதி: ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை!!