ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (18:31 IST)

களையிழந்த காணும் பொங்கல்: மெரீனாவுக்கு வந்த பொதுமக்களை விரட்டிய போலீஸார்!

களையிழந்த காணும் பொங்கல்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான ஜனவரி 17-ஆம் தேதி காணும் பொங்கல் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் ஒரு பொது இடத்தில் ஏராளமான மக்கள் கூடி ஒருவரை ஒருவர் காணும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள் 
 
குறிப்பாக சென்னை மெரினாவில், கிண்டி சிறுவர் பூங்காவில், மகாபலிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் முதல் லட்சக்கணக்கான வரை கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது
 
இதன் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். இருப்பினும் ஒரு சிலர் மெரினா கடற்கரைக்கு செல்ல முயன்றதாகவும் அவர்களை அங்கு காவலுக்கு நின்றிருந்த காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

மெரினா உள்பட அனைத்து சுற்றுலா தளங்களும் காணும் பொங்கல் இன்று களையிழந்து இருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது