வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:54 IST)

திருப்பி அனுப்பப்பட்ட கருணாநிதி சிலைகள்: காரணம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைக்க  சோழவரத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் 2 சிலைகளை கொண்டு வந்தனர். இந்த இரண்டு சிலைகளும் ஃபைபர் பொருட்களால் செய்யப்பட்டிருந்தது. 
 
வெள்ளை வேட்டி அணிந்து இருக்கையில் உட்கார்ந்தவாறு அமைக்கபப்ட்டிருந்த இந்த சிலையின் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும், மற்றொரு சிலை 80 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் சிலைகளை வைக்க இதுவரை யாருக்கும் உரிய அனுமதி  தரப்படவில்லை. அனுமதி இல்லாமல் இந்த சிலைகள் கொண்டு வரப்பட்டதால் சிலைகளை நினைவிடத்தில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சிலைகளை கொண்டு வந்த தொண்டர்கள் வருத்தத்துடன் திருப்பி எடுத்து சென்றனர்.