வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 4 ஜூன் 2015 (09:19 IST)

டிராபிக் ராமசாமிக்கு அல்வா கொடுத்த தமிழக அரசியல் கட்சிகள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சமுக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வரவழங்கவில்லை.
  
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக வேட்பாளராக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகின்றார்.
 
இந்த தேர்தலில், திமுகவும், பாமக, தாமக, விடுதலை சிறுத்தை கட்சிகள் போன்ற பல கட்சிகள் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டன. பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள்தான் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
 
இதனையடுத்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி  தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய டிராபிக் ராமசாமி வந்தார். அப்போது அவரிடம் உங்களை எந்த கட்சி எல்லாம் ஆதரிக்கின்றது என  செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர், ஆர்.கே. தொகுதியில் என்னை ஆதரிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை என்றார்.
 
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், சமுக சேவகர் டிராபிக் இராமசாமிக்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் கைவிரித்துவிட்டன என்பது குறிப்பிடதக்கது.