வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (21:56 IST)

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான்: ஓ.பன்னீர்செல்வம்

ops
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலா தான் என்றும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது ஒன்ற்றை தலைமை தாங்குவது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர்செல்வம் என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான் என்றும் அதை யாரும் மறுக்க முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பது ஒன்றும் தேசவிரோத கருத்து அல்ல என்றும் அவர் சசிகலா ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார் 
 
மேலும் நான் எங்குமே சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குழப்பத்தின் உச்சம் ஆக உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது