புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:48 IST)

கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு:? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு அம்மாநில மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் கேரளாவின் பக்கத்து மாநிலமான தமிழகத்தில் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது
 
இதனை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கோவை மாவட்டத்தில் ஒரு சிலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பரவிய வதந்தி கோவை மாவட்ட ஆட்சியரும் மறுப்பு தெரிவித்துள்ளார். கோவையில் இதுவரை யாருக்கும் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை என்றும் தவறான செய்தி பரவுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் நிபா வைரஸ் குறித்து தவறான தகவலை பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் நிபா வைரஸ் பரவியதாக செய்தி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது