செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (19:25 IST)

புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, தியேட்டர்கள் மால்கள் அடைப்பு, சென்னை தி நகரில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31ம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைர.ஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்றும் குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வகை பேருந்துகளில் திரைச்சீலைகளும் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கால் டாக்சிகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அனைத்து துறைகளும் மிகவும் சுறுசுறுப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்