1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (12:38 IST)

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. காணாமல் போன திமுக தொண்டர்கள்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது திமுக தொண்டர்கள் அதிகாரிகளை வழிமறித்து பிரச்சனை செய்தனர். ஒரு சில வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜியின் சென்னை கரூர் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் ஒரு திமுக தொண்டரை கூட செந்தில் பாலாஜி வீட்டு முன் காணவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வரும்போது ஆவேசமாக அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்ட திமுக தொண்டர்கள் ஒருவர் கூட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட வரவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்
 
 
Edited by Mahendran