1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:57 IST)

புயல், கனமழை வரும் முன்பே ரூ.900 கோடி தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம்: நிர்மலா சீதாராமன்

சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படும் முன்பும் தென் மாவட்டங்களில் கன மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் முன்பும் 900 கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தேசிய பேரிடர் நிதியாக மிக்ஜாம் புயல் வருவதற்கு முன்பே 450 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கொடுத்தாகிவிட்டது என்றும் அதேபோல் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி கனமழை பெய்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதியே 450 கோடி ரூபாய் கொடுத்தாகிவிட்டது என்றும் மொத்தம் 900 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதியாக கொடுத்தாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார் 
 
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கென தனியாக நிதியுதவி விடுவிக்கவில்லை என்றாலும் வழக்கமான பேரிடர் நிதிப்பங்கீட்டை தமிழகத்திற்கு வழங்கிவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார்.
 
Edited by Siva