திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (09:04 IST)

செந்தில் பாலாஜியை எதிர்த்து நிர்மலா பெரியசாமி போட்டியா?

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். 
 
இந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் செந்தில் பாலாஜியை எதிர்த்து அதிமுக சார்பில் நிர்மலா பெரியசாமி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. நிர்மலா பெரியசாமியின் சொந்த மாவட்டம் கரூர் என்பதாலும் சாதி ரீதியாக செந்தில் பாலாஜியை எதிர்கொள்ள சரியான போட்டியாக அவர் இருப்பார் என்பதாலும் அவரது பெயர், பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் சூலூர் தொகுதியில், மறைந்த எம்.எல்.ஏ கனகராஜ் மனைவி ரத்தினம் அல்லது முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸின் மனைவி பாக்கியலட்சுமி அல்லது சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது