1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (08:18 IST)

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஊடுறுவலா?

NIA1
சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் சோதனைக்கு பின்னரே பிற நாட்டு  அமைப்பினர் தமிழகத்தில் ஊடுருவி உள்ளார்களா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva