தொடரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம்: 3 ஆவது நாளாக உண்ணாவிரதம்

Suresh| Last Modified ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (10:25 IST)
நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சியில் பணிபுரிந்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகிற 7 ஆம் தேதி 7 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களில் பயிற்சி பெறாத தற்காலிக பணியாளர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுப்பி இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல் தறையினர் கைது செய்தனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :