1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (12:57 IST)

தினகரன் கைது; அடுத்து அதிமுக அமைச்சர்கள் சிக்குகிறார்கள்?: எச்.ராஜா சூசக தகவல்!

தினகரன் கைது; அடுத்து அதிமுக அமைச்சர்கள் சிக்குகிறார்கள்?: எச்.ராஜா சூசக தகவல்!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனை விசாரணை செய்த டெல்லி காவல்துறை நேற்று இரவு அவரை கைது செய்தனர். இந்நிலையில் தினகரனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் கைது செய்யப்படுவார்கள் என்பதை சூசகமாக பாஜகவின் எச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.


 
 
டிடிவி தினகரனை விசாரணைக்கு டெல்லிக்கு வரவழைத்த போலிசார் நான்கு நாட்களாக 32 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். இறுதியாக நேற்று இரவு தினகரன், அவரது நண்பர், உதவியாளர் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர் டெல்லி போலீசார்.
 
தொடர்ந்து சசிகலா குடும்பத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்தவாறே உள்ளது. இந்நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் பாஜகவே காரணம் என தினகரன் ஆதரவாளர்கள் வெளிப்படையாக கூறிவருகின்றனர். இந்நிலையில் தினகரன் கைதை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஃபேஸ்புக்கில் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தினகரன் கைது தமிழ்நாட்டில் இனி பல அரசியல் திருப்பங்கள் இருக்கும். தினகரன் கைது, அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது, அடுத்து அதிமுக அமைச்சர்கள்??? என எச்.ராஜா கூறியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை ஜோசியம் கூறுவது போல் தமிழக பாஜக தலைவர்கள் கூறிவருவது அப்படியே நடக்கிறது.
 
இந்நிலையில் அடுத்ததாக தமிழக அமைச்சர்கள் கைதாவார்கள் என எச்.ராஜா கூறியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.