புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம்

Suresh| Last Modified வியாழன், 1 ஜனவரி 2015 (09:45 IST)
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


 
பெருமாள் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 
2015ஆம் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
 
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள், ஓம் சக்தி பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
 
வேணுகோபால் சுவாமி கோவிலில் அதிகாலை நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா...கோவிந்தா... என சத்தமிட்டு பெருமாளை வணங்கினர்.
 
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காலை முதல் அதிகமாக வரதொடங்கினர். பவானி ஆற்றில் தலைக்கு காசு வைத்து குளித்து புத்தாண்டை கொண்டாடினார்கள்.
 
அந்தியூர் குருநாதசுவாமி கோவில், கோபிசெட்டிபாளையம் பாரியூர் அம்மன் கோவில், பெருந்துறை அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
 
மேலும் பவானிசாகர் பூங்கா, கொடிவேரி அணை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளிலும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.


இதில் மேலும் படிக்கவும் :