புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை என்ற தனி மாவட்டம் சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கேட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகள் போராட்டங்கள் செய்த மக்களுக்கு வெற்றி கிடைத்தது.
ஏற்கனவே திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் அதேபோல் மயிலாடுதுறை மாவட்டமும் தனி மாவட்டமாக தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநாதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

