1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (06:58 IST)

டிடிவி தினகரனின் ஆன்லைன் ஃபார்முலா. அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அவர் நவீன முறையில் ஆன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு பணம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

+

 


இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராக செலவு செய்து வரும் தினகரன், அதே நேரத்தில் தேர்தல் கமிஷனிடம் இருந்தும் தப்பிக்க ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்து வருவதாக கூறப்படுகிறது

ஆர்.கே.நகரில் உள்ள ஒவ்வொரு தெருவாக செல்லும் தினகரன் கோஷ்டியினர் முதலில் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளுக்கு சென்று அந்த கடையில் மாதந்தோறும் மளிகை சாமான்கள் வாங்குவது வாடிக்கையாளர்கள் யார்? அவர்கள்  எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறார்கள் போன்ற விவரத்தை சேகரித்து அதன்பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று உங்களது மளிகைக் கடை பில்லை செட்டில் செய்துவிட்டோம், நீங்கள்  தொப்பிக்கு வாக்களியுங்கள் என்று கூறி வருகின்றார்களாம்

அதேபோல் வாக்காளர்களிடம் வங்கி கணக்கு எண்ணை வாங்கி ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு தொப்பிக்கு வாக்களியுங்கள் என்று கூறி வருகின்றார்களாம்.

தினகரன் கோஷ்டி கடைபிடிக்கும் இந்த யுக்திகளை பார்த்து திமுக, ஓபிஎஸ் அணிகளை வெலவெலத்து உள்ளதாகவும். இப்படியெல்லாம் கூடவா யோசித்து வாக்காளர்களை வளைக்க முடியுமா? என்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.