திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (09:58 IST)

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இரண்டு நாட்களில் வலுபெறும்! – வானிலை ஆய்வு மையம்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் பரவலாக மழை வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.