1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:29 IST)

தவறான தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை: நெல்சன் மனைவி எச்சரிக்கை..!

மொட்டை கிருஷ்ணனுக்கு எந்தவித பண உதவியும் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து ஆதாரமற்ற தகவல் வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் நெல்சன் மனைவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் என்பவர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் பணம் வாங்கியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து நெல்சன் மனைவி மோனிஷா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எந்தவிதமான பண உதவியும் வழங்கவில்லை, ஆதாரமற்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக கடந்த ஏழாம் தேதி காவல்துறை கோரிய விளக்கத்தை அளித்துள்ளோம், காவல்துறைக்கு தேவையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறோம், எனவே என்னை பற்றி தவறான தகவல்களை நீக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் மொட்டை கிருஷ்ணன் உடன் மோனிஷாவுக்கு  தொடர்பு என தகவல் வெளியான நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva