1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (18:30 IST)

தமிழகத்தில் இதுவரை பதிவான தபால் வாக்குகள் எத்தனை? சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக தபால் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே 
 
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் இதுவரை 89 ஆயிரத்து 185 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் 
மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபாட் இயந்திரங்களும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் அந்த இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
மேலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடைபெற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறிய சத்யபிரதா சாகு, இதுவரையில் 319 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்