1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (17:13 IST)

திருமுருகன் காந்தி நக்சல் இயக்க தலைவர்: பாஜக எச்.ராஜாவின் அடாவடி!

திருமுருகன் காந்தி நக்சல் இயக்க தலைவர்: பாஜக எச்.ராஜாவின் அடாவடி!

ஈழ தமிழர் பிரச்சனை குறித்தும், இந்திய தமிழர்களின் பிரச்சனை குறித்தும் ஐநாவில் தொடர்ந்து பதிவு செய்து குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த  திருமுருகன் காந்தியை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நக்சல் இயக்க தலைவர் என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் மே 17 இயக்கத்தினர் கடந்த மே 21-ஆம் தேதி அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். இதற்கு அனுமதி அளிக்காத காவல்துறை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது.
 
இதனையடுத்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு. இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தை தெரிவித்து, அவர் மீதான் குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.


 
 
இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நக்சல் தலைவர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இந்தற்கான புகழ் தமிழக முதல்வரையே சேரும். மேலும் பலர் மீதும் குண்டர் சட்டம் பாய உள்ளது என கூறியிருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் வருகின்றன.