வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (13:10 IST)

ஜெ.வை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்: அதிர்ச்சி செய்தி!

ஜெ.வை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்: அதிர்ச்சி செய்தி!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா திருமணம் செய்யாதவர். செல்வி ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் அவ்வப்போது அவருக்கு குழந்தை இருக்கிறது என்ற சர்ச்சை தகவல்கள் பரவும். பின்னர் அதுவும் காணாமல் போய்விடும்.


 
 
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அதிகமான சந்தேக புத்தி இருந்ததாகவும், அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் தான் என ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
 
உடல் நலம் சரியில்லாமல் இருந்த நடராஜன் தனது உடல் நிலையை தேற்றிக்கொண்டு மீண்டும் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் தமிழ் உள்ளிட்ட தேசிய ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடராஜன் ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் அவரைப் பற்றி விமர்சித்தார்.
 
ஜெயலலிதாவுக்கு சந்தேக புத்தி மிக அதிகமாக இருந்தது. ஜெயலலிதாவை திருமணம் செய்து கொள்கிறேன் என ஒருவர் ஏமாற்றினார். தனது அண்ணன் அண்ணியும் கூடத் தன்னை ஏமாற்றியதாக ஜெயலலிதா கூறினார். இப்படி பல பேரால் சொந்த வாழ்க்கையில் ஏமாற்றப்பட்டதால் ஜெயலலிதாவுக்கு சந்தேகப் புத்தி அதிகமாகிவிட்டது என கூறியுள்ளார் நடராஜன்.