திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (17:47 IST)

கலவர நோக்கில் பாஜக: வேல் யாத்திரைக்கு முட்டுகட்டை போட்ட நாராயணசாமி!

புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேல் யாத்திரைக்கு குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்றும் நீதிமன்றத்தை மதிக்காமல் பாஜகவினர் நடந்துகொள்வது சரியில்லை என்றும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.