1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (16:55 IST)

வேல் யாத்திரைக்கு அனுமதி தராத முதல்வருக்கு நன்றி: இல கணேசன்

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார்
 
இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் 
வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேல் யாத்திரைக்கு குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி தராத தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் 
 
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி தராததால் தான் அந்த யாத்திரைக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைத்தது என்றும் அவ்வாறு அனுமதி தராமல் விளம்பரம் தேடித் தந்த முதலமைச்சருக்கு நன்றி என்றும் இல கணேசன் குறிப்பிட்டுள்ளார்