நந்தினியை சும்மா விட மாட்டேன் - மாமியார் ஆவேசம்


Murugan| Last Modified புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)
தனது மகனின் தற்கொலைக்கு காரணமான நடிகை நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோரை சும்மா விடமாட்டேன் என, மரணமடைந்த நந்தினியின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

 
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் ‘மைனா’ நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 
 
முக்கியமாக விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததில், இவரை பலரும் மைனா எனவே அழைத்து வந்தனர். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவராகவும் அவர் இருந்துள்ளார். தற்போது, அவர் பல தொடர்களில் நடித்து வருகிறார். 
 
இவர் கார்த்திகேயன் என்பவரை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி, காதல் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். 
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு விடுதியில் தங்கியிருந்த கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி ஓராண்டு கூட முடிவைடையாத நிலையில், கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது, சின்னத்திரை கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். தன்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார் . மேலும், அவருக்கு வேரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார். 
 
அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில்  “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி “ எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்” என அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :