1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (10:14 IST)

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் ராஜபக்சே ஆட்சி: நாமல் ராஜபக்‌சே பேட்டி..!

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் ராஜபக்சே ஆட்சி வரும் என ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜபக்சே ராஜபக்சே ஆட்சிக்கு திடீரென பிரச்சனை வந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் மீண்டும் ராஜபக்சே ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது மகன் நாமல் ராஜபக்சே  தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளிக்க உள்ளார். 
 
அதில் ராஜபக்சே ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றது என்றும் அந்த சதியின் காரணமாகத்தான் எனது அப்பா ஆட்சியை இழந்தார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் வடக்கு மாகாணத்தில் ராஜபக்சே வெற்றி பெறுவார் என்றும் அவர் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தெரிவித்தார். தமிழர்களை காக்க சிங்கள ராணுவம் பெரும் உயிரிழப்பை சந்தித்தது என்றும் மோடி தமிழில் பேசுவது போல் எனது அப்பாவும் தமிழ் பேசுகிறார் ஆனால் அவருக்கு தமிழர்கள் வாக்கு கிடைப்பதில்லை என்று கூறினார். 
 
மேலும் நான் ஒரு விஜய் ரசிகர் என்றும் எனது தந்தை ரஜினி ரசிகர் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். 
 
Edited by Mahendran