செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 மே 2021 (12:11 IST)

30 நாட்கள் விடுமுறை கேட்ட நளினி-முருகன்: நிராகரித்த சிறை நிர்வாகம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒருவரான பேரறிவாளனுக்கு நேற்று 30 நாட்கள் மருத்துவ விடுமுறை கிடைத்தது. அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் 30 நாட்கள் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் அந்த விடுமுறை கோரிக்கையை சிறை அதிகாரியை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகன் தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்க 30 நாட்கள் விடுப்பு கேட்டு மனு ஒன்றை சிறைத்துறை அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும், அந்த மனுவை சிறை அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே காரணத்திற்காக 30 நாட்கள் விடுப்பு கேட்ட முருகன் மனைவியின் மனுவின் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் நளினி தான் சிறையில் வேலை செய்த பணத்தில் இருந்து ரூ.5000 கொரோனா நிவாரண நிதியாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.