விடுதலைப் புலிகள் பற்றி நக்மா, குஷ்பூ பேச்சு: உருவ பொம்மை எரிப்பு


Caston| Last Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (17:27 IST)
விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசியதாகக் கூறி, சென்னையில் டிகை நக்மா மற்றும் குஷ்பூ ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
 
 

தமிழகம் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை நக்மா மற்றும் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ ஆகியோர் சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய போது விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று சென்னையில் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் நடத்திய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகைகள் குஷ்பூ மற்றும் நக்மாவின் உருவ பொம்மையை எரித்தனர்.

இந்த போராட்டத்தின் போது அவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினர்

தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீசார் கைது செய்தனர். இன்று மாலை அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :