திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (11:08 IST)

நாகர்கோவில் நாகராஜா கோவில் அன்னதான உண்டியலில் ரூ.34 ஆயிரம் வசூல்!

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். 
 
அவ்வாறு வருகிற பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவில் முன்பு அன்னதானம் உண்டியல் ஒன்றை வைத்துள்ளது. 
 
இந்த உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், ஆய்வர் சரஸ்வதி, கணக்கர் சிதம்பரம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ரூ.34 ஆயிரத்து241 வசூல் கிடைத்துள்ளது.