வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (16:27 IST)

வேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி!

வேறு சின்னம் வேண்டும் என நாம் தமிழர் கட்சி  தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  கடந்த 2019 மற்று 2021 ஆகிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வேறு கட்சிக்கு ஒதுக்கியது. 
 
 நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டது. இது அன்றாடம் பயன்படுத்தும்  மைக் போல் இல்லாமல் வேறுவடிவத்தில் உள்ளதால் இதை வாக்குப்பெட்டியில் மக்களால் அடையாளம் காண முடியுமா? என அக்ட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில் ஆட்டோ அல்லது தீப்பெட்டி சின்னத்தை  நாம் தமிழர் பெறலாம் என கூறப்பட்ட நிலையில்,  வேறு சின்னம் வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
அதன்படி படகு அல்லது பாய்மரம் சின்னம் தர வேண்டும் என்று கேட்டுள்ளதால் வேறு சின்னம்  ஒதுக்குவது பற்றி இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சமீபத்தில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். இம்முறையும் அக்கட்சி தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.