செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)

சமூக வலைதளத்தில் சீமான் குறித்து அவதூறு- பாஜக, நிர்வாகி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சி கோவை மண்டல செயலாளர் அப்துல் வஹாப் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். 
 
அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் சாட்டை என்ற பெயரில் youtube சேனல் நடத்தி வருகிறார்.இவரின் வளர்ச்சியையும், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக.,வை சேர்ந்த திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் சாட்டை துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி வருகிறார்.
 
அவரை கண்டிக்காமல் மாநில தலைவர் அண்ணாமலை ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே திருச்சி சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் திருச்சி சிவா மகனின் திருச்சி சூர்யா நடவடிக்கையில் திமுக ஆதரவு கொடுப்பதாகவும்,முதலமைச்சர் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் மீது தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.