வங்கியில் நுழைந்து ஊழியரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்: சென்னை தி.நகரில் அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை தி.நகரில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டியதால், ஊழியர் காதில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரில் பர்கிட் சாலையில் உள்ள எச்டிஎப்சி வங்கி இன்று காலை முதல் பரபரப்பாக இயங்கி வந்தது. இந்த நிலையில், அடையாளம் தெரியாத ஒரு நபர் வங்கிக்கு வாடிக்கையாளர் போல் நுழைந்து, சில நிமிடங்கள் ஆள் நடமாட்டத்தை கவனித்தார்.
திடீரென, அவர் தினேஷ் என்ற வங்கி ஊழியரை அரிவாளால் வெட்டினார். இதனால், தினேஷின் காதில் காயம் ஏற்பட்டது. உடனே சக ஊழியர்கள் தினேஷை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை போலீசார் பிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் ஏன் வங்கியில் நுழைந்து, அரிவாளால் வெட்டினார் என்ற காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் மட்டுமே உண்மை வெளிவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran