செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2016 (19:24 IST)

மீண்டும் ஒரு சிறை மரணம்: குண்டு வெடிப்பு வழக்கு ஆயுள் தண்டனை கைதி

குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசி ஒருவர் கோவை மத்திய சிறையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
 

 
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் ஒசிர் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், கடந்த 18 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
 
இந்நிலையில் அப்துல் ஒசிருக்கு சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறைத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் அப்துல் ஒசிர் உயிரிழந்தார்.
 
இதற்கிடையே, கடந்த 15 நாட்களாக நெஞ்சு வலியினால் அப்துல் ஒசிர் அவதிபட்டு வந்தது தொடர்பாக சிறைத் துறையினரிடம் முறையிட்ட போதும், சிறைத்துறை அதிகாரிகள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணமென அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.